உ.பியில் கார் மீது மோதிய ரயில் - 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பைசாபாத்: உ.பி மாநிலம் பைசாபாத் அருகே கார் மீது ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
பாராபங்கி மாவட்டத்தில், ஆளில்லா லெவல் கிராசிங் ஒன்றில் இந்த விபத்து இன்று பிற்பகல் நடந்தது.
லக்னோ - சுல்தான்பூர் இடையிலான ஹரிஹர்நாத் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பர்ஹா ரயில்வே கிராசிங் பகுதியை அது கடக்க முயன்றபோது தண்டவாளத்தின் குறுக்கே கார் வந்து விட்டது.
இதையடுத்து கார் மீது ரயில் பயங்கரமாக மோதி தூக்கி வீசியெறிந்தது. இதில் காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார்கள். நான்கு பேர் படுகாயமடைந்தனர். கார் அப்பளம் போல நசுங்கிப் போய் விட்டது.












Click it and Unblock the Notifications