கும்மிடிப்பூண்டி முகாம்-25 இலங்கை தமிழர்கள் மாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் தங்கியிருந்த 25 பேரைக் காணவில்லை. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு மொத்தம் 3837 அகதிகள் தங்கியுள்ளனர். இவர்கள் முறையான அனுமதியில்லாமல் வெளியில் செல்லக் கூடாது.

இந்த நிலையில், இவர்களில் சிலர் யாருக்கும் தெரிவிக்காமல் முகாமிலிருந்து வெளியேறி சென்னை புறநகர்ப் பகுதிகளில் தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து முகாமில் போலீஸார் ஆய்வு நடத்தினர். இதில், வைதேகி, லோகினி, அன்புமணி, சிவஜோதி, கலைச்செல்வன் உள்பட சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்த 25 தமிழ் அகதிகள் அங்கு இல்லாதது தெரிய வந்தது. அனைவரும் முறையாக பதிவு செய்யப்பட்ட அகதிகள் ஆவர்.

இவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல, 43 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் முகாமில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+