சூர்யா- வடிவேலு- ரவிக்குமார்- முருகதாஸ்-தினா வீடுகளில் வருமான வரித்துறை ரெய்ட்

அதே போல இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், தினா ஆகியோரின் வீடுகள மற்றும் அலுவலகங்களிலும் ரெய்ட் நடந்தது.
சென்னை தியாகராய நகரில் போக் ரோட்டில் உள்ள சூர்யாவின் வீட்டிலும் அடையாறில் உள்ள அவரது பங்களாவிலும் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது.
விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலுவின் வீடு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு, அலுவலகம், வளசரவாக்கத்தில் இயக்குனர் முருகதாசின் வீடு, மற்றும் சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
வடிவேலுவின் மதுரை வீட்டிலும்..
வடிவேலுன் மதுரை வீட்டிலும் இந்தச் சோதனைகள் நடந்தன. சென்னையி்ல் உள்ள அரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்த அதே நேரத்தில், மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள வடிவேலுவின் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணஙகளை எடுத்துச் சென்றனர்.
சூர்யாவின் பவுண்டேஷன் அலுவலகங்களில்..
அதே போல சூர்யாவின் வீடுகள் தவிர அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் அலுவலகங்கள் மற்றும் அது தொடர்பான நிர்வாகிகளும் இந்த ரெய்டுக்கு தப்பவில்லை.
பொங்கல் தினத்தன்று தனது அகரம் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி செய்யவிருப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பு வெளியான நான்கு தினங்களுக்குப் பிறகு இந்த ரெய்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் நடிகர் சூர்யா, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் பலர் பல லட்சம் வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளதாம். கணக்கில் வராத பணம் மூலம் ஏராளமாய் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் சொத்துக்களைக் குவித்திருப்பதாகவும் வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்ததாலேயே இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
தனுஷ்-உதயநிதி வீட்டில் ரெய்டு புரளி!:
இதற்கிடையே தனுஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது என்ற தகவல் பரவியதால் திரையுலகம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது. உதயநிதி ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தப்படவில்லை என்று பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளே தெரிவித்தனர்.
தனுஷ் வீட்டில் ரெய்டு எதுவும் இப்போது நடத்தவில்லை என்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications