விலைவாசி உயர்வுக்கு எதிராக தர்ணா-முலாயம் கைது
Subscribe to Oneindia Tamil
லக்னோ: விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கைது செய்யப்பட்டார். அவரது கட்சியினர் தடியடி நடத்தி விரட்டியடிக்கப்பட்டனர்.
லக்னோவின் முக்கியப் பகுதியான ஹஸ்ரத்கஞ்ச் கிராசிங் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் முலாயம் சிங் யாதவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்ட முலாயம் சிங் யாதவை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். அதைத் தடுக்க முயன்ற சமாஜ்வாடிக் கட்சியினர் தடியடி நடத்திக் கலைக்கப்ட்டனர்.












Click it and Unblock the Notifications