'பனி': ரயிலில் கடைசி பெட்டி பயணத்துக்கு தடை

கடும் பனிப்பொழிவு காரணமாக அண்மையில் அடுத்தடுத்து ரயில்கள் மோதி விபத்து நேரிட்டது. முன்புறம் செல்லும் ரயிலின் கடைசி பெட்டிகளில் பின்புறம் இருந்து வரும் ரயில்கள் மோதியதாலே இந்த விபத்து நேரிட்டது.
இதையடுத்து, கடைசிப் பெட்டியில் கார்டு மற்றும் சரக்குகள் மட்டுமே ஏற்றப்படும். குளிர்காலம் முடியும் வரை ரயில்களில் பின்புறம் உள்ள பெட்டிகளில் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை ஏற்கெனவே வட மத்திய ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே பகுதிகளில் அமலில் உள்ளது.
இது வரை ரயிலின் பின்பகுதியில் உள்ள எஸ்எல்ஆர் பெட்டிகளில் கார்டுடன் ஊனமுற்றோர். பெண்கள் ஆகியோரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இனி கார்டு ஏறிய பிறகு பெட்டி பூட்டப்பட்டு விடும்.
பனிக்காலம் முடியும்வரை இதை நடைமுறைப்படுத்துமாறு ரயில் நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் சிவப்பு விளக்கும் எரியும் பகுதியில் ரயிலை 2 நிமிடங்களுக்குப் பதில் இனி 5 நிமிடங்கள் நிறுத்துமாறு டிரைவர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications