கௌதமலாவில் நிலநடுக்கம்- மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil

ரிக்டர் அளவில் 6 புள்ளியாக பதிவான நிலநடுக்கம், கௌதமலாவில் இருந்து 60 மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.40க்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கௌதமலா, எல்சல்வேடர் ஆகிய நகரங்களில் மக்கள் பூகம்பத்தை உணர்ந்துள்ளனர். கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு ரோட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்.
பசிபிக் கடல் பகுதியில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தால் ஹைதி பேரழிவை சந்தித்திருக்கிறது.
இந்நிலையில் பூகம்பம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
எனினும் கௌதமலாவில் பூகம்பத்தால் உயிர்சேதம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications