'2010ல் மேலும் பல பிரிட்டிஷ் நிறுவனங்கள் வீழ்ச்சியடையும்'

Subscribe to Oneindia Tamil

London Skyline
லண்டன்: இந்த ஆண்டு மேலும் பல பிரிட்டிஷ் நிறுவனங்கள் வீழ்ச்சியைச் சந்திக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக உலககை ஆட்டிப் படைத்த பெருமந்தம் சில நாடுகளில் மெல்ல நீங்கி வருகிறது. ஆனால் பிரிட்டனில் இன்னும் நிலைமை மேம்படவில்லை.

2007 - 2008-ஐ விட 2009-ன் பிற்பகுதியில் பிரிட்டன் பொருளாதார நிலைமை சற்று ஆறுதல் தரும் அளவு இருந்தாலும், இந்த ஆண்டின் தொடக்கமே மிக மோசமாக உள்ளது.

இந்த நிலையில் நலிந்த அல்லது திவாலான நிறுவனங்களுக்கு அரசு வழங்கி வரும் நிதி உதவி திட்டம் கடந்த டிசம்பர் 2009-லேயே நிறைவு பெற்று விட்டது.

அஇந்த திட்டப்படி, வரி செலுத்த முடியாமல் தடுமாறிய 242,000 வர்த்தக நிறுவனங்களுக்கு 4.2 பில்லியன் பவுண்டுகள் வரிச் சலுகை அளித்தது அரசு.

பல நிறுவனங்களுக்கு கைகொடுத்த இந்த திட்டம் இன்னும் சில மாதங்கள் தொடர வேண்டும் என்பது தொழில் முனைவோரின் வேண்டுகோளாக உள்ளது. இந்த திட்டம் அடியோடு நிறுத்தப்படும் பட்சத்தில், இன்னும் பல நிறுவனங்கள் 2010-ல் சரிந்து விழும் அவலத்தைத் தடுக்க முடியாது என்கிறார் ஏற்கெனவே திவாலான அனுபவசாலி பெக்பிஸ் ட்ராய்னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+