ஸ்டாலின் பாதுகாப்புக்கு சென்ற ஏட்டு மர்ம சாவு
தர்மபுரி: தர்மபுரிக்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்பு பணிக்கு சென்ற சேலம் ஏட்டு மர்மாக இறந்தார்.
சேலம் மாவட்டம் வீராணம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் நாகேஷ் (45). 18ம் தேதி தர்மபுரியில் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றார்.
அப்போது, தர்மபுரி எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பேரில் ஏட்டு நாகேஷ் கலெக்டர் அலுவலக சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், கலெக்டர் அலுவலகம் அருகே நாகேஷ் மர்மான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஏட்டு நாகேஷ் உடலை தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர். அவரது உடல் மருத்தவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏட்டு நாகேஷ் மரணம் குறித்து தர்மபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications