இங்கிலாந்தில் இந்தியப் பெண் அடித்துக் கொலை
லண்டன்: இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் அருகே உள்ள ரீடிங் நகரில் கென்னட் ஆற்றின் கரையோர சாலையில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பெண் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷா முனீர் என்றும், காவெர்ஷம் நகரில் உள்ள பள்ளியில் ஏ-லெவல் படிக்கும் மாணவி என்றும் தெரியவந்தது.
ஆஷா இறந்து கிடந்த இடத்தில் அவரின் கைப்பையில் இருந்த பொருட்கள் சாலையில் சிதறிக் கிடந்தன.
ஆஷாவிடம் வழிப்பறி முயற்சி நடந்திருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆஷாவின் உடலில் ஏராளமான காயங்களும் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இவ்வழக்கு தொடர்பாக 19 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications