இந்தியாவுடன் வலுவான வர்த்தக உறவை விரும்புகிறோம் -மலேசிய பிரதமர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவுடன் உள்ள வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள மலேசியா விரும்புவதாக அந்த நாட்டு பிரதமர் நஜீப் துன் அப்துல் ரஸ்ஸாக் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள நஜீப், டெல்லியில் நடந்த அசோசம், எப்ஐசிசிஐ, சிஐஐ ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மலேசிய இந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும்போது இதை வலியுறுத்தவுள்ளேன். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் அவசியமானது. இரு நாட்டு வர்த்தக உறவும் இதனால் மேலும் வலுப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் மன்மோகன் சிங் மலேசியா வருவார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் ரஸ்ஸாக்.












Click it and Unblock the Notifications