சிறுநீரக குழாயில் கல் - தயாநிதி மாறனுக்கு ஆபரேஷன்

Subscribe to Oneindia Tamil

Dayanidhi Maran
டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சிறுநீரகக் குழாயில் ஏற்பட்டிருந்த கல்லை டெல்லி மருத்துவமனையில் டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர்.

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது.

மும்பை சென்றிருந்த தயாநிதி மாறன் நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்ததும் அவருக்கு கடும் வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவருக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, சிறுநீரக் குழாயில் கல் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் டாக்டர்கள் கூறுகையில், தற்போது தயாநிதி மாறன் நலமாக இருக்கிறார். அவருடைய சிறுநீரகப் பாதையில் இந்தக் கல் அடைத்திருந்தது. அந்தக் கல்லின் அளவு 6
மில்லிமீட்டராகும்.

இதுபோன்ற கல் சிறுநீரகத்தில் உருவாகி, அப்படியே சிறுநீரகப் பாதைக்கு வந்து அடைத்துக் கொன்று நின்று விடும். அப்போது கடும் வலி ஏற்படும்.

இந்தக் கல்லால் சில காலமாகவே தயாநிதி மாறனுக்கு பிரச்சினை இருந்து வந்தது. தற்போது கல் எடுக்கப்பட்டு விட்டதால் அவர் நலமடைந்துள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+