கோல்மால் தாசில்தார்-அமைச்சர் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியின மாணவர்கள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்க காரணாக இருந்த தாசில்தார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் அய்யந்தோப்பு கல்லூரி மாணவ, மாணவியர் விடுதி உள்ளது. அதே போன்று, சிங்கனூர் பள்ளி மாணவ, மாணவி விடுதி உள்ளது. இந்த விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் தமிழரசி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின்பு அமைச்சர் தமிழரசி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடத்தில் ஆய்வு நடத்தினோம். அதில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியது தெரிய வந்தது.

இதற்குக் காரணமான அய்யந்தோப்பு கல்லூரி விடுதி பொறுப்பாளர், உதவியாளர், சமையலர், சிங்கனூர் பள்ளி விடுதி சமையலர் உட்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளேன்.

மேலும், திண்டிவனம் தாசில்தார் (ஆதி திராவிடர் நலத்துறை) மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+