குடிநீர் கேட்டு போராடிய கிராமத்தினர் மீது போலீஸ் தடியடி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: குடிநீர் மற்றும் மின்சாரம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புதுஅழகாபுரம் கிராமம் உள்ளது.

இக்கிராம மக்கள், கடந்த ஐந்து நாட்களாக தங்கள் கிராமத்தில் குடிநீர் மற்றும் மின்சார வினியோகம் இல்லை எனக்கூறி இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலையில் போக்குவரத்தை மறித்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த போலீசார் மறியலை கைவிடுமாறு கோரி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடந்தது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் மறியலை கை விடுவோம் என கிராம மக்கள் கூறினார்.

அப்போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+