வேலூர் கோட்டையில் தொழுகை நடத்த அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்- திருமாவளவன் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் கோட்டைக்கு உள்ளே இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனுடன் அக்கட்சித் தொண்டர்களும் ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கையால், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோட்டையைச் சுற்றிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications