எங்களுக்கு வேலையே இல்லை-இணையமைச்சர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

Junior Minister Purandeswari
டெல்லி: கேபினட் அமைச்சர்கள் எங்களுக்கு எந்த வேலையும் தருவதி்ல்லை. கிட்டத்தட்ட சும்மா தான் உட்கார்ந்திருக்கிறோம் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இணை, துணை அமைச்சர்கள் புகார் கூறியுள்ளனர்.

மத்​திய அமைச்​ச​ர​வை​யில் இடம்​பெற்​றுள்ள இணை, துணை அமைச்​சர்​களுடன் பிர​த​மர் மன்​மோ​கன் சிங் ஆலோசனை நடத்தினார். 38 துறைகளைச் சேர்ந்த இந்த இணையமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆராய இக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஆனால், 33 இணையமைச்சர்கள் மட்டுமே பங்கேற்ற இக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இணையமைச்​சர்​க​ளில் பெரும்பாலானோர் தங்​கள் மனக்​கு​மு​றலை பிர​த​ம​ரி​டம் கொட்டித் தீர்த்துவிட்டனர்.

தங்​கள் இலாகா கேபி​னட் அமைச்​சர்​கள் மீது சர​மா​ரி​யாக புகார் தெரி​வித்​த​னர்.​ தங்​க​ளுக்கு அவர்கள் போது​மான பணி​களை ஒதுக்​கு​வ​தில்லை என்​றும்,​​ தங்​க​ளுக்கு தனிப் பொறுப்பு​கள் வழங்​கப்​ப​டு​வ​தில்லை என்​றும் அவர்​கள்
தெரிவி​த்​த​னர்.​

இதனால் நாங்கள் அலுவலகங்களுக்குச் போவதையே குறைத்துக் கொண்டுவிட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

திரி​ண​மூல் காங்​கி​ர​ஸைச் சேர்ந்த ஒரு அமைச்சர் பிரதமரிடம், உண்மையைச் சொன்னால் எங்​கள் அமைச்​ச​கத்​தில் என்ன நடை​பெற்​றுக் கொண்​டி​ருக்​கி​றது என்​பது கூட எங்​க​ளுக்​குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

திமுக பரம திருப்தி:

ஆனால், தி​மு​க​வைச் சேர்ந்த நிதித்துறை இணை​ய​மைச்​சர் எஸ்.எஸ்.​ பழ​னி​மா​ணிக்​கம் தனக்கு போதிய பணிகள்
ஒதுக்​கீ​டு​கள் செயயப்பட்டுள்ளதாகவும், தனது கேபினட் அமைச்சர் பிரணாப் முகர்ஜி தனக்கு போதிய முக்கியத்துவம் தருவதாகவும் கூறினார்.

அதே போல திமுகவைச் சேர்ந்த இணையமைச்சர்கள் அனைவருமே தங்களுக்கு போதிய பணிகளும் முக்கியத்துவமும் தரப்படுவதாகக் கூறியுள்ளனர்.

அ​தே​போல் உள்​துறை இணையமைச்சராக உள்ள காங்கிரஸைச் சேர்ந்த அஜய் மக்​கான்,​​ தனது கேபி​னட் அமைச்​சர் ப.சிதம்​ப​ரம் மீது முழு திருப்தி தெரி​வித்​தார்.

இந்த ஆலோசனையையடுத்து இணையமைச்சர்களின் பிரச்சனைகள் குறித்து கேபி​னட் அமைச்​சர்​க​ளு​டன்
பேசு​வ​தாக பிர​த​மர் உறுதியளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+