எஸ்.ஐ கொலை- சிபிஐ விசாரணை கோரிய மனு டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.ஐ. வெற்றிவேல் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதுதொடர்பாக ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவில்,

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் குண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அங்கு வந்த அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்தனர்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதப்படுத்தினர். எனவே வெற்றிவேல் கொலையில் சதி எதுவும் நடந்துள்ளதா? என்பது குறித்தும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தாமதப்படுத்தியது ஏன்? என்பது குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல். கோகலே தலைமையிலான பெஞ்ச், இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

சென்னையில் இன்னொருவர் சரண்

இந் நிலையில் இந்தக் கொலை தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்துள்ளா.

சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனை குடும்ப தகராறில் படுகொலை செய்ய திட்டமிட்ட அவர் மனைவி சிவகாமி குடும்பத்தினர் ஆள்மாறாட்டத்தில் வெற்றிவேலை கொலை செய்த இந்த வழக்கில் இதுவரை நெல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி, மைத்துனர் கந்தசாமி, ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த கள்ளபிரான், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகாமியின் சகோதரர்கள் கண்ணன், சுப்பிரமணியன் கோர்ட்களில் சரண் அடைந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் வெளிமாவட்டங்களில் தேடி வருகின்றனர்.

சம்பவத்தில் தொடர்புடைய முககிய குற்றவாளியாக கருதப்படும் சிவகாமியின் மற்றொரு சகோதரருக்கு தனி்ப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வலை விரித்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ், சென்னை ஜார்ஜ் டவுண் 15வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைநதார்.

அவரை 25ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+