மராத்தியருக்கு மட்டுமே டாக்சி லைசன்ஸ்-ராஜ் தாக்கரே
மும்பை: மராத்தியர்கள் தவிர வேறு யாருக்கேனும் மும்பையில் டாக்சி ஓட்ட லைசன்ஸ் கொடுத்தால் மும்பையில் ஒரு டாக்சி கூட ஓட விட மாட்டோம் என்று மகாராஷ்டிர நவ நிர்மான் சேனை தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
தற்போது மகாராஷ்டிர அரசியலின் மையப் புள்ளியாக டாக்சி மாறியுள்ளது. அதில் தற்போது இனவெறியைக் கலந்து ஆட ஆரம்பித்துள்ளனர்.
மராத்தி மொழி பேசத் தெரிந்தோருக்கும், 15 ஆண்டுகள் மகாராஷ்டிராவில் வசித்தோருக்கும் மட்டுமே இனி டாக்சி லைசன்ஸ் என்று அறிவித்தார் முதல்வர் சவான்.
இது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து குஜராத்தி, இந்தி தெரிந்தாலும் கூட வழங்கப்படும் என பல்டி அடித்தார் சவான்.
இந்த நிலையில் ஏற்கனவே இனவெறியைக் கிளப்பி விட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கும் ராஜ் தாக்கரே இந்த விவகாரத்தை கப்பென்று பிடித்து பாலிடிக்ஸை தொடங்கி விட்டார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மகாராஷ்டிரர்கள் அல்லாதோருக்கு மும்பையில் டாக்சி ஒட்ட அனுமதி தரக் கூடாது.
மராத்தியர்கள் தவிர வேறு யாருக்கேனும் மும்பையில் டாக்சி ஓட்ட உரிமம் வழங்கப்பட்டால் ஒரு டாக்சி கூட ஓடாத நிலையை எங்களது கட்சியினர் ஏற்படுத்துவர்.
வட இந்தியர்கள் தங்கிச் செல்ல மகாராஷ்டிரா ஒன்றும் சத்திரம் கிடையாது.
மகாராஷ்டிரா என்று மட்டும் கூறியுள்ளார் முதல்வர் சவான். ஏன் மும்பையிலும் மராத்தியர்களுக்கு மட்டுமே டாக்சி உரிமம் என்று கூற அவருக்குத் தைரியம் இல்லையா
என்றார் அவர்.
போராட்டத்தில் குதிக்க டாக்சி டிரைவர்கள் முடிவு...
இதற்கிடையே மகாராஷ்டிர அரசின் புதிய கொள்கை முடிவுக்கு மகாராஷ்டிர டாக்சி டிரைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க டாக்சி டிரைவர்கள் சங்கங்கள் அணி திரண்டு வருகி்ன்றன.
மும்பை டாக்சி டிரைவர்கள் சங்கம் கூறுகையில், மும்பை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடருவது குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றது.
அதன் தலைவர் அல் குத்ரோஸ் கூறுகையில், இது ஜனநாயக விரோதமான உத்தரவு. பாரபட்சமானது. அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் அனைத்து டாக்சிகளையும் இயக்காமல் நிறுத்தி ஸ்டிரைக் செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications