அசிங்க அர்ச்சகர் தேவநாதனின் மகள்கள் நீக்கம்- பள்ளி நிர்வாகம் அடாவடி

Subscribe to Oneindia Tamil

Devanathan
காஞ்சிபுரம்: கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனால் அவரது இரு மகள்களும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு படிப்பை இழந்து நிற்கின்றனர்.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் செக்ஸ் லீலைகளைப் புரிந்து அசிங்கப்படுத்திக் கைதான தேவநாதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரால் இப்போது சிறையிலிருந்து ஜாமீனில் கூட வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோர்ட்டுக்கு அவரை கூட்டி வந்தபோது பெண்கள் முட்டைகளையும், செருப்புகளையும் வீசித் தாக்கினர். மேலும் துடைப்பத்தாலும் அடிக்கப் பாய்ந்தனர்.

மேலும், அவரது விவகாரத்தில் சில முக்கியப் புள்ளிகள் தொடர்பு வைத்திருப்பதால் வெளியில் வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என தேவநாதனின் மனைவி கங்கா அஞ்சுகிறார். எனவே தனது கணவரை ஜாமீனில் எடுக்க அவர் விரும்பவில்லை.

இந்த நிலையில் தேவநாதனின் செயலால் அவரது இரு மகள்களுக்கும் படிப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேவநாதனுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் 5-ம் வகுப்பும், இன்னொரு மகள் 3-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இருவரையும் அவர்கள் படித்து வந்த பள்ளிக்கூட நிர்வாகம் நீக்கி விட்டதாம். இதுகுறித்து தேவநாதனின் வக்கீல் கூறுகையில்,

தேவநாதன் உயிருக்கு பாதுகாப்பில்லை என்று கருதுவதால் மனைவி கங்கா அவரை ஜாமீனில் எடுக்க மறுத்து வருகிறார்.

தேவநாதனின் குழந்தைகளையும் பள்ளியில் இருந்து நீக்கி விட்டனர். அவர்கள் படிப்பை தொடர அனுமதிக்கும்படி பள்ளி நிர்வாகத்துடன் பேசி வருகிறேன் என்றார்.

அப்பா செய்த தவறுக்குப் பிள்ளைகள் என்ன பாவம் செய்தனர். இரு குழந்தைகளையும் பள்ளியிலிருந்து நீக்கியுள்ள செயல் நிச்சயம் சரியல்ல என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

இதற்கிடையே, இனிமேல் எந்தக் கோவிலிலும் போய் மணி அடித்து பூஜை செய்ய முடியாத நிலையும் தேவநாதனுக்கு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி கங்காவின் அண்ணன் அதாவது மச்சான் சுப்பிரமணியன் குருக்கள் சமுதாயத் தலைவராக இருக்கிறார். அவர், தேவநாதனை சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்து விட்டார். இதனால் எந்தக் கோவிலிலும் இனிமேல் தேவநாதனால் பூஜை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+