உள்ளாட்சி நிரிவாகத்தை குறை கூறிய கணக்கு தணிக்கை அதிகாரிக்கு சம்மன்
சென்னை: வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை தமிழக அரசு, தனது இலவச கலர் டிவி திட்டம் உள்ளிட்ட இலவசத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த கணக்குத் தணிக்கை அதிகாரிக்கு, தமிழக சட்டசபை கணக்குக் குழு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் 2007-08ம் ஆண்டுக்கான தணிக்கை ஆய்வறிக்கை கடந்தாண்டு ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. இதன்பின்னர் இந்த அறிக்கை கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆய்வறிக்கையில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தணிக்கை அதிகாரி சங்கர நாராயணன் கடந்த 12ம் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, உள்ளாட்சி அமைப்புகளில் காணப்படும் குறைபாடுகள் பற்றியும், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி இலவச பொருட்கள் வழங்குவதற்கு செலவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி உடனடியாக மறுப்பறிக்கை வெளியிட்டார். ஊரக வளர்ச்சித் துறை சார்பிலும் நீண்ட விளக்கம் தரப்பட்டது.
இந்நிலையில், சங்கரநாராயணன் அளித்த பேட்டி, சட்டசபை உரிமை மற்றும் அதிகாரத்தை பாதிக்கும் விதத்தில் இருப்பதாக தமிழக சட்டசபை பொதுகணக்குக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சங்கர நாராயணுக்கு, சட்டசபை பொது கணக்குக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications