மேலும் பல தீவிரவாதத் தாக்குதல்கள் வரலாம் - ஏ.கே.அந்தோணி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைதி நிலவுவதை தீவிரவாதிகள் விரும்பவில்லை.
எந்தவகையான ஊடுறுவலையும், தீவிரவாதத் தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் நாட்டு மக்கள் இருக்க வேண்டும்.
ஊடுறுவல்கள் தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறோம். ஜம்மு காஷ்மீரில் நிலைமை மேம்படக் கூடாது என்பதே தீவிரவாதிகளின் எண்ணமாகும். அங்கு தற்போது வேகமாக அமைதி திரும்பி வருகிறது. இதை அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
எனவே தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி நாட்டில் நாச வேலைகளை நிகழ்த்த தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டு வருகின்றன.
நமது பாதுகாப்புப் படையினர் இதை எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றார் அந்தோணி.












Click it and Unblock the Notifications