எல்லையில் வேலிகள் துண்டிப்பு: தீவிரவாதிகள் ஊடுருவலா?
ஜம்மு: குடியரசு தினவிழாவை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர்.
இதனால் எல்லைப் பகுதியில் இந்திய படைகள் உச்சக்கட்ட பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடும் பனிப்பொழிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, இந்த அத்துமீறல் முயற்சி நடந்திருப்பதாக எல்லையோர பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறி்த்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் வழக்கமான சோதனை வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.
அப்போது, ஜம்மு மாவட்டத்தின் ரன்பீர் சிங் எல்லை பகுதியில் அப்துல்லியான் பார்டர் அவுட் போஸ்டில் சர்வதேச எல்லையின் பில்லர் எண் 851 மற்றும் 852க்கும் இடையே வேலி துண்டிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் பகுதியில் வேலியின் ஒன்பது ஒயர்களும், இந்திய பகுதியில் 10 ஒயர்களும் துண்டிக்கப்பட்டிருந்ததை ரோந்துப் படையினர் கண்டுபிடித்தனர்.
இது தீவிரவாதிகள் இந்திய பகுதியில் ஊடுருவ மேற்கொண்ட முயற்சியாக இருக்கக்கூடும். தற்போது இப்பகுதிகளில் கடும் பனி பொழிந்து வருவதை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும் இதுபோன்ற முயற்சிகள் நடக்காமல் தடுக்க எல்லைப் பகுதியில் இந்திய படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்' என்றார்.












Click it and Unblock the Notifications