கலைஞர் வீட்டுவசதித் திட்டம் மார்ச்சி்ல் தொடக்கம்: கே.என்.நேரு

திருச்சி மாவட்டம், துறையூர் வீரமச்சான்பட்டியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வங்கும் விழா அசு சார்பில் நடைபெற்றது.
இதில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசுகையில், கிராமப்புறங்களை மேம்படுத்த, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் கருணாநிதி, மின்சார வசதி இல்லாத கிராமமே இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுதோடு மட்டும் அல்லாமல் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
மேலும், 1,500 மக்கள்தொகை கொண்ட கிராமங்களில் இணைப்பு சாலைகள் ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்தி பஸ் வசதிகள் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார்.
நடப்பாண்டில் 10 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படும். தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச கலர் டிவி வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள 21 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தர, கலைஞர் வீட்டு வசதித் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை, மார்ச் 3ம் தேதியன்று திருச்சியில், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்க உள்ளார்' என்றார்.












Click it and Unblock the Notifications