சிவசேனா கட்சியின் ரிமோட் கன்ட்ரோல் என்னிடம்தான் உள்ளது - பால் தாக்கரே

Subscribe to Oneindia Tamil

Thackeray
மும்பை: அரசியலின் ரிமோட் கன்ட்ரோல் என்னிடம்தான் உள்ளது. தொடர்ந்தும் அது என்வசமே இருக்கும் என்று கூறியுள்ளார் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே.

சிவசேனா கட்சி தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று பால் தாக்கரேவின் 84வது பிறந்த நாளாகும். இதையொட்டி தனது சாம்னா பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள தலையங்கம்...

சிவசேனா கட்சியின் விவகாரங்கள் அனைத்தும் எனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கட்சியின் ரிமோட் கன்ட்ரோல் என்னிடம்தான் உள்ளது. அரசியல் ரிமோட் கன்ட்ரோலும் என்னிடமே உள்ளது. தொடர்ந்தும் என்னிடமே இருக்கும்.

45 ஆண்டுகளுக்கு முன்பு விதைத்த விதை இன்று வளர்ந்து வேரூண்றி, டெல்லியின் அதிகாரபீடம் வரை நீடித்து வளர்ந்து உறுதியாக உள்ளது.

மராத்தி மனுதர்மம் என்பதே எங்களது மையக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து அதுவே எங்களது கொள்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.

ஐந்து ஆண்டுகளுக்கு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக பால் தாக்கரே அறிவித்தார். கட்சியின் தலைமைப் பொறுப்பை மகன் உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்தார் தாக்கரே என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் தொடர்ந்து பால் தாக்கரேவே கட்சி விவகாரங்களை கட்டுப்படுத்தி வருகிறார் என்ற பேச்சு இருந்தது. தற்போது அதை அவரே தனது வாயால் ஒப்புக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+