மட்டன் கறி வேண்டும்- அல் கொய்தா கைதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரின் பூர்னியா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அல் கொய்தா தீவிரவாதியான குலாம் ரசூல் கான் என்கிற கான் மிர்ஸா, தனக்கு சாப்பாட்டில் ஆட்டுக் கறியும் சேர்த்துத் தரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பூர்னியா பகுதியிலிருந்து வங்கதேசத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கடந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டவர் மிர்ஸா. தற்போது பூர்னியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு தினசரி சைவச் சாப்பாடுதான் தரப்பட்டு வருகிறது. ஆனால் தனக்கு தினசரி 2 கிலோ ஆட்டுக் கறியும், ஒரு கிலோ கோழிக்கறியும் தரப்பட வேண்டும். இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பேன் என்று மிரட்டல் விடுத்துள்ளாராம் மிர்ஸா.

இதனால் சிறை அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர். சிறை விதிகளில் இப்படியெல்லாம் சாப்பாடு தர இடம் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் தனது முடிவில் மிர்ஸா உறுதியாக இருப்பதால் இதை எப்படிக் கையாளுவது என்று யோசித்து வருகின்றனராம் சிறை அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+