புதிய ஆடியோ வெளியீடு: அமெரிக்காவுக்கு பின்லேடன் எச்சரிக்கை

அல்-ஜெஸீரா தொலைக்காட்சியில் பின்லேடன் பேசிய ஆடியோ பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
அதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து பின்லேடன் பேசியுள்ளதாவது:
கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி டெட்ராய்ட் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட அமெரிக்க பயணிகள் விமானத்தை தகர்க்க திட்டமிட்டது அல்-கொய்தா தான்.
செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்த்து உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தேன். அதேபோல எங்களின் போர்வீரன் பரூக் அப்துல் முத்தாலப்பை அனுப்பி மற்றொரு மெசேஜ் கொடுக்க திட்டமிட்டோம்.
பாலஸ்தீனத்தில் நாங்கள் நிஜமான பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் பெற்றால் தான், அமெரிக்கா பாதுகாப்பாக இருப்பது சாத்தியமாகும்.
நீங்கள் இஸ்ரேலை ஆதரிக்கும் வரை, உங்கள் மீதான எங்களின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதைத் தான் கடவுளும் விரும்புகிறார்' என்று கூறியுள்ளார்.
ஆடியோவில் இருப்பது பின்லேடனின் குரல்தான் என உறுதி செய்வதற்கும், மறுப்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால், முந்தைய காலங்களில் வெளியான ஆடியோ பதிவுடன் இந்த பதிவு ஒத்துப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications