உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கிறேன் - மாலத்தீவு அதிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தனது நாட்டுக் குழுவினரோடு நானும் பங்கேற்கிறேன் என்று மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத் கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை அவர் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவும், மாலத்தீவும் நீண்ட கால நட்புறவுடன் திகழ்ந்து வருகின்றன. இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசித்தேன்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வர வேண்டும் என அப்போது முதல்வர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்டேன். மாலத்தீவு குழுவுக்கு நானே தலைமை தாங்கி கலந்து கொள்வேன்.
முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது என்றார் நஷீத்.












Click it and Unblock the Notifications