தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றார் எஸ்.எஸ்.மேனன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர மேனன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளரான, 60 வயது மேனன், நேற்று எம்.கே.நாராயணனிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மத்திய இணை அமைச்சர் அந்தஸ்தில் அவர் செயல்படுவார்.
1962ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான மேனன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியுறவுத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான உச்சகட்ட இறுதிப் போர் ஆகிய முக்கிய சம்பவங்களின்போது வெளியுறவுத்துறைச் செயலாளராக முக்கியப் பங்கு வகித்தவர் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications