தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை படுஜோர்!
கோவை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 ஆயிரம் லாட்டரிச் சீட்டுகளை கோவை அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் சமூக விரோதிகள் சிலர் வெளி மாநிலங்களில் இருந்து போலி லாட்டரிகளை தமிழகத்திற்கு வரவழைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கேரள எல்லையை ஒட்டியுள்ள பொள்ளாச்சி, மதுக்கரை, கிணத்துக்கடவு, உடுமலை, வால்பாறை பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் அதிகளவில் விற்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, லாட்டரி விற்பனையாளர்களை பிடிக்க எல்லைப் பகுதிகள் முழுவதும் போலீசார் அதிரடி கண்காணிப்பை மேற்கொண்டனர்.
உக்கடம் பஸ் நிலையத்திலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, உக்கடம் அண்ணாநகரைச் சேர்ந்த காதர் (50), இப்ராகிம் (35) ஆகியோர் கேரளா பஸ்சில் இருந்து பெரிய பண்டல்களை எடுத்து சென்ற போது, போலீசார் வழிமறித்து விசாரித்தனர்.
பிடிபட்டவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து, அவர்கள் கொண்டு சென்ற பார்சலை போலீசார் பிரித்து பார்த்தனர்.
உள்ளே, 22 ஆயிரம் லாட்டரிச் சீட்டுகள் இருந்தது. இதனையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications