செக் மோசடி-பிரபல இசையமைப்பாளருக்கு பிடிவாரண்ட்!
நெல்லை: செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத பிரபல இசையமைப்பாளருக்கு நெல்லை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் சுந்தர் சி பாபு. பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
பாளை மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த பஞ்சாட்சரம் மகன் சுதாகர். இவரும், பாபுவும் நண்பர்கள். சுகாதரிடம் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சுந்தர் சி பாபு ரூ.20 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு சுதாகர் தனது நண்பர் பாபுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ரூ. 7லட்சத்து 31 ஆயிரத்து 11க்கு ஜூன் மாதம் முன்தேதியிட்ட காசோலையை சுதாகரிடம் சுந்தர் சி பாபு கொடுத்துள்ளார்.
இந்த காசோலையை சுதாகர் வங்கியில் செலுத்தினார். ஆனால், சுந்தர் சி பாபு கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.
இதுதொடர்பாக சுதாகருக்கு நண்பர் பாபு சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. இதனால், இவ்விவகாரம் குறித்து நெல்லை ஜேஎம் கோர்ட்டில் சுதாகர் புகார் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திர கண்ணன் ஜனவரி 25ம் தேதி சுந்தர் சி பாபுவை கோர்ட்டில் ஆஜாராகும்படி உத்தரவிட்டார். ஆனால் பாபு ஆஜாராகவில்லை. இதனால் சுந்தர் சி பாபுவுக்கு நீதிபதி பிரவாராண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications