தூக்கிலிடப்பட்டார் சதாமின் உறவினர் கெமிக்கல் அலி!

ஈராக் கோர்ட் சமீபத்தில் இவருக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதையடுத்து கெமிக்கல் அலி தூக்கிலிடப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சதாம் உசேன் ஆட்சிக்காலத்தின்போது 1988ம் ஆண்டு ஹல்பஜா கிராமத்தில் வசித்து வந்த குர்து இன மக்களை விமானம் மூலம் விஷ வாயுவைத் தெளித்துக் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்தவர் கெமிக்கல் அலி என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதேபோல குர்து இன மக்களுக்கு எதிரான பல்வேறு படுகொலைகளின் பேரிலும் கெமிக்கல் அலி மீது வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் அவருக்கு மொத்தம் ஐந்து தூக்குத் தண்டனைகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈராக் அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாக்தாத்தில் குண்டுவெடிப்பு - 36 பேர் பலி
கெமிக்கல் அலி தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து பாக்தாத்தில் வன்முறை வெடித்தது.
கெமிக்கல் அலி தூக்கிலிடப்பட்ட தகவல் பரவிய சில நிமிடங்களில் மத்திய பாக்தாத் நகரில் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
முதல் குண்டு ஷெரட்டன் மற்றும் பாலஸ்தீன் ஹோட்டல்களைக் குறி வைத்து வெடித்தது. மற்ற இரு குண்டுகளும் ஹம்ரா மற்றும் பாபிலோன் ஹோட்டல்களைக் குறி வைத்து வெடித்தன.












Click it and Unblock the Notifications