அழுக்கு படிந்த தேசியக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்!
பாடாலா (பஞ்சாப்): அழுக்கு படிந்த தேசியக் கொடியை டிராக்டர் டிராலியை மேடையாக வைத்து, கொடியேற்று விழா நடத்திய அமைப்பினர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பாடாலா நகரில் பஞ்சாப் ஸ்டேட் மார்கெட்டிங் ஃபெடரேஷன் சார்பில் குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.
கொடியேற்று விழாவின் போது, மூவர்ண தேசியக் கொடி மிகவும் அழுக்கடைந்து காணப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு டிராக்டர் டிராலியை வைத்து அதையே மேடையாக்கி கொடியேற்று விழாவை அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
மூவர்ண கொடியை அழுக்காக வைத்திருந்தது மற்றும் மற்றும் கொடி மேடை சட்ட வரைமுறைக்கும் குறைவாக மிகச்சிறிய அளவில் இருந்தது போன்ற விதிமீறல்கள் நடந்துள்ளதாக விழா அமைப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாடாலா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ராகுல் சாபா இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications