கண்தானம் செய்ய முன் வாருங்கள்-அமைச்சர் நெப்போலியன்
குன்னூர்: அகில இந்திய அளவில் ஒரு கோடியே 6 லட்சம் பேர் கண் பார்வை தெரியாதவர்களாக உள்ளனர். ஆனால் நாட்டில் 30 ஆயிரம் பேர் தான் கண் தானம் செய்ய முன் வந்துள்ளனர். அதிக அளவில் கண்தானம் செய்தால், பார்வையற்றோர் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று மத்திய அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
நீலசிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ முகாமில் உடல் ஊனமுற்றோர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட பின்பு மத்திய சமூக நலம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக இணை அமைச்சர் நெப்போலியன் கலந்து கொண்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஊட்டியில், கடந்த ஆண்டு பெய்த மழையினால் நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் விரைந்து முடிந்து உள்ளது.
முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருகிறார். அவரது வழியில் நடக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
அகில இந்திய அளவில் ஒரு கோடியே 6 லட்சம் பேர் கண் பார்வை தெரியாதவர்களாக உள்ளனர். ஆனால் நாட்டில் 30 ஆயிரம் பேர் தான் கண் தானம் செய்ய முன் வந்துள்ளனர். நாம் அதிக அளவில் கண்தானம் செய்தால், பார்வையற்றோர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விடுதிகள் கட்ட, மத்திய சமூக நல அமைச்சகத்தின் மூலம் அந்தந்த மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
50 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்களை தேர்வு செய்து, அந்த கிராமங்களில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய ஒரு கிராமத்திற்கு ரூ 10 லட்சம் நிதி கேட்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications