1,750 டன் தமிழக ரேஷன் அரிசி மாலத்தீவுக்கு கடத்தல்!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்த இருந்த 1,750 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு செல்ல இருந்த எம்.வி.போந்தே-2 என்ற கப்பலில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தமிழக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தூத்துக்குடி துறைமுகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த கப்பலில் 1,750 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டறிப்பட்டது.
மேலும், தூத்துக்குடி சத்யாநகரில் உள்ள ஒரு குடோனில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 4 கோடி ரூபாய் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications