பத்மஸ்ரீ விருதை நிராகரித்தார் பிரபல இந்தி கவிஞர்!
முசாபர்பூர் (உ.பி.): எனது சிஷ்யர்களுக்குத்தான் பத்மஸ்ரீ விருது பொருத்தமாக இருக்கும். அந்த காலகட்டத்தை நான் தாண்டி வந்து விட்டேன். இப்போது அதை எனக்குக் கொடுப்பதை நான் நிராகரிக்கிறேன் என்று கூறி பத்மஸ்ரீ வாங்க மறுத்துள்ளார் பிரபல இந்திக் கவிஞர் ஆச்சார்ய ஜானகி வல்லப் சாஸ்திரி.
இவருக்கு 80 வயதுக்கு மேலாகி விட்டது. விருதை நிரகாரிப்பது குறித்து சாஸ்திரி கூறுகையில், கடந்த 1994ம் ஆண்டே எனக்கு பத்மஸ்ரீ விருது அளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதை நிராகரித்து விட்டேன்.
இந்த வயதில், எனது கடைசிக்காலகட்டத்தில் பத்மஸ்ரீ விருது கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
எனது சிஷ்யர்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும்தான் இந்த விருது பொருத்தமானதாக இருக்கும் என்றார் சாஸ்திரி.
இந்தியில் பிரபலமான எழுத்தாளர் சாஸ்திரி. கவிஞராக மட்டுமல்லாமல், கதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், கஜல் பாடல்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications