60வது குடியரசு: மக்களுக்கு நிம்மதியில்லையே-அத்வானி
டெல்லி: 60 ஆண்டு பழமையான இந்திய குடியரசு என பெருமை பட்டுக்கொண்டாலும், சாதாரண பொதுமக்கள் விலைவாசி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் வருத்தத்தோடு இருக்கிறார்கள் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.
குடியரசு தினத்தை ஒட்டிஸ டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கொடியேற்று விழா நடத்திய பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
'இந்தியாவில் அனைத்து வளங்களும் இருப்பதால் வளர்ந்த நாடுகள் வரிசையில் முன்னணி வகிப்போம் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளது.
இந்தியா குடிரசு நாடாக மாறி 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாக பலரும் பெருமைபட்டுக் கொள்கிறோம். முதிர்ந்த குடியரசு நாடு என சொல்லிக்கொள்கிறோம்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி நாட்டில் வாழும் சாதாரண மனிதன் விலைவாசி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் பிரச்னையால் விரக்தி அடைந்திருக்கிறான்.
மும்பையில் புகுந்து தீவிரவாதிகள் தாக்கியது போன்ற சம்பவம் மீண்டும் நடக்குமோ என்ற அச்சம் இன்னமும் இருக்கிறது.
அப்படி ஒரு சம்பவம் இனி நடக்காது என துணிச்சலுடன் ஆளும் அரசாங்கத்தால் திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை.
பாகிஸ்தான் கூட அப்படி ஒரு தாக்குதல் இந்தியாவில் நடக்குமா, நடக்காதா என்பதை எங்களால் சொல்லமுடியாது என்கிறது.
சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவது குறித்து மத்திய அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
அதுமட்டுமல்ல, உள்நாட்டில் நடக்கும் தேர்தல் முறைகளை பார்க்கும் போது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. பண பலம், படை பலம் ஆகியவற்றால் ஒரு சில பிரிவினர் மட்டும் தேர்தல்களில் ஆதாயம் பெறுகின்றனர்.
உலகத்திற்கு முன்னோடி ஜனநாயகமாக இந்தியா திகழ வேண்டும் என்ற உறுதிமொழியை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications