கனடா: இந்திய விமானத்தை கடத்தியவர் நாடு கடத்தல்

46 வயதாகும் சிங் உள்பட ஐந்து சீக்கியர்கள், 1984ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி ஸ்ரீநகரிலிருந்து டெல்லி சென்ற விமானத்தை கடத்தினர்.
அதன் பின்னர் ஐந்து பேரும், பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அங்கு ஐந்து பேருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் பின்னர் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
அதன் பேரில் அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1995ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்தார் சிங்.
பல்பீர் சிங் என்ற பெயரில் கனடாவுக்குச் சென்றார். போலியான ஆப்கன் பாஸ்போர்ட்டைத் தயாரித்து அதன் மூலம் கனடாவுக்குத் தப்பினார்.
கனடாவில் இருந்தபோது பி.ஏ. மற்றும் சட்டப் படிப்பை படித்தார். பின்னர் தான் வக்கீலாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு கனடா அரசிடம் விண்ணப்பித்தார்.
ஆனால் அவருடைய கடந்த கால வரலாறு தெரிய வரவே அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த காலத்தில் செய்த தவறுக்கு வருந்துவதாகவும், திருந்தி வாழ விரும்புவதாகவும் கோரினார் சிங். இருப்பினும் இது நிராகரிக்கப்பட்டது. நேற்று அவர் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.












Click it and Unblock the Notifications