Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை-மாஜி அமைச்சரின் மகன் சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திச் சென்று ஆந்திராவில் கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் குமரகுரு, அவரது பெண் உதவியாளர் லீனாவுடன் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

சென்னை தியாகராயநகர் தெற்கு போக் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் மணி. 62 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வந்தார். கடந்த 7ம் தேதி கடத்தப்பட்டார். பின்னர் அவரது உடல் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள புதப் பகுதியிலிருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மணியின் 2வது மனைவி பார்வதி போலீஸில் புகார் கொடுத்தார். மயிலாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், வெளிநாட்டு இந்தியர்களிடம் இருந்து குறைந்த வட்டிக்கு ரூ.50 லட்சம் கடன் வாங்கித்தருவதாக சொல்லி மணி ரூ.5 லட்சம் கமிஷன் தொகை வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், ஏமாந்த 4 பேர் மணியை காரில் கடத்தி சென்று கொலை செய்து, பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டதில், கொளத்தூரைச் சேர்ந்த பூபதி என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பூபதியிடம் ரூ.2 லட்சம் பணத்தை மணி ஏமாற்றி விட்டார்.

அவரைப்போல் மேலும் ரூ.3 லட்சத்தை ஏமாந்த கணேசன், கந்தசாமி, பாபு என்ற சிவா ஆகியோரும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆனார்கள். இவர்களை போலீசார் தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த கணேசன் கோவை கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். கந்தசாமி, பாபு ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

பிடிபட்ட பூபதி போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், மணி கட்டி இருந்த வேட்டியை அவிழ்த்து அதை முறுக்கி பூபதிதான் கழுத்தை நெறித்துள்ளார். கந்தசாமியும், கணேசனும் மணியின் கை-கால்களை அமுக்கி பிடித்துள்ளனர். பின்னர் மணி இறந்த பிறகு அவரது பிணத்தை எரிக்க ஆந்திர எல்லையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி உள்ளனர். அதன்பிறகு சத்தியவேடு சென்று பெட்ரோல் ஊற்றி பிணத்தை எரித்து புதரில் வீசியுள்ளனர்.

இந்த வழக்கில் குமரகுருபரன் என்பவரும் ஒரு குற்றவாளி என்று விசாரணையில் தெரிய வந்தது. மறைந்த முன்னாள் அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் ஆவார்.

கல்குவாரி தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகம் திருவள்ளூரில் உள்ளது. அங்குதான் மணியை அடைத்து வைத்து முதலில் சித்திரவதை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரூ.5 லட்சம் பணம் கேட்டு குமரகுருபரன்தான் செல்போனில் பேசி மிரட்டியதும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் குமரகுருபரனும், அவரது பெண் உதவியாளர் லீனா (30) ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு்ளது.

இதையடுத்து இருவரையும் போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதன் இறுதியில இருவரும் கைது செய்யப்பட்டனர்.

போலீஸாரிடம் குமரகுருபரன் அளித்த வாக்குமூலத்தில், லோன் வாங்கித் தருவதாக கூறி ரூ.54 ஆயிரம் என்னிடம் மணி கமிஷன் வாங்கி இருந்தார்.

என்னை போலவே பூபதி, கந்தசாமி, பாபு, கணேசன் ஆகியோரிடமும் பணம் வாங்கி இருந்தார். லோனும் வாங்கித் தரவில்லை. கொடுத்த கமிஷனையும் திரும்பித் தரவில்லை. பல முறை கேட்டும் சரியான பதில் இல்லை.

இதையடுத்து அவரது உதவியாளரிடம் கேட்டபோது அவர் இப்படி யெல்லாம் கேட்டால் தரமாட்டார். எங்காவது கொண்டு சென்று வைத்து மிரட்டினால்தான் பணம் கிடைக்கும் என்று ஐடியா கொடுத்தார்.

அதன்படி அவரை 5 பேரும் சேர்ந்து கடத்தி சென்றோம். அங்கு உள்ள எனது குடோனில் அடைத்து வைத்து கேட்டபோதும் பணம் இல்லை என்று கூறிவிட்டார்.

அவரது மனைவிக்கும் போன் செய்து ரூ.5 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாக கூறினோம். ஆனால் பணம் வர வில்லை. அதனால் ஆத்திரம் அடைந்து என்னுடன் இருந்தவர்கள் கொலை செய்து விட்டனர்.

போலீஸ் தேடாமல் இருக்க ஆந்திர எல்லையில் பிணம் வீசப்பட்டது என்று கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், குமரகுருபரனின் பெண் உதவியாளர் லீனாவுக்கு மணி கடத்தப் பட்டதிலும், குடோனில் அடைத்து வைக்கப்பட்டதிலும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தல் மற்றும் அடைத்து வைத்து கொலை செய்தது பற்றி தெரிந்து இருந்தும் போலீசுக்கு சொல்லாமல் மறைத்ததால் லீனாவை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த கணேசன் என்பவர் கோவை கோர்ட்டில் சரணடைந்து உள்ளார். இதில் தலைமறைவாக உள்ள கந்தசாமி, பாபு என்கிற சிவா மற்றும் காரை ஓட்டிய டிரைவர் சரவணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+