இலங்கை: ஆயுதங்களுடன் ஓடிப் போன 400 ராணுவத்தினர்-புரட்சிக்கு திட்டமா?

இதனால்தான் அந்த ஹோட்டலை சுற்றி வளைத்துள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.
ஆனால், தன்னைக் கொல்லவே ராணுவத்தினரை விட்டு ஹோட்டலை அதிபர் ராஜபக்சே சுற்றி வளைத்துள்ளதாக பொன்சேகா கூறியுள்ளார்.
இதனால் கொழும்பில் பெரும் குழப்பம் நிலவுகிறது. மேலும் பொன்சேகாவுக்கு ஆதரவாக இந்த 400 பேருடன் மேலும் ராணுவத்தினரும் இணைந்து புரட்சியில் ஈடுபடலாம் பீதியும் கொழும்பில் நிலவுகிறது.
அதிபர் தேர்தலில் தோல்வி கண்டுள்ள பொன்சேகா கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது பாதுகாவலர்களுடன் தங்கியுள்ளார். இந் நிலையில் இந்த ஹோட்டலை ராணுவத்தினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர். நேற்று இரவே ஹோட்டலை முற்றுகையிடத் தொடங்கினர்.
தேர்தல் தோல்வியால் பொன்சேகா தப்பிப் போய் விடாமல் தடுப்பதற்காகவும், முடிவு வெளியானவுடன் அவரைக் கைது செய்யும் திட்டத்துடனும் ராணுவத்தை ராஜபக்சே குவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராணுவத்தரப்பு விளக்குகையில், இந்த ஹோட்டலில் ராணுவத்தை விட்டு விலகி ஓடிய 400 பேர் பெரும் ஆயுதங்களுடன் பதுங்கியுள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படலாம் என அஞ்சுகிறோம்.
இதனால்தான் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் முகமாகவும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ராணுவப் புரட்சி நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக கொழும்பு முழுவதும் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இதை ராணுவம் மறுத்துள்ளது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று அது தெரிவித்துள்ளது.
10 பாதுகாப்பு அதிகாரிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு:
இந் நிலையில் பொன்சேகாவின் 10 பாதுகாப்பு அதிகாரிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள பொன்சேகா தங்கியுள்ள ஹோட்டலில் இவர்களும் உடன் இருந்தவர்கள் ஆவர்.
இந்த பத்து அதிகாரிகளையும் சில நிமிடங்களுக்கு முன்பு ராணுவத்திடம் பொன்சேகா ஒப்படைத்தார். இவர்களை ஒப்படைக்க வேண்டும் என முன்னதாக ராணுவம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த பத்து பேரும் புரட்சிக்காரர்கள் இல்லை என்றும் தேர்தல் ஆணையத்தால் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டவர்கள் என்றும் ராணுவம் கூறியுள்ளது.
ஆனால் சத்தம் போடாமல் ராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் பலத்த பேச்சு அடிபடுகிறது.
நாவல்பிட்டியாவில் ஊரடங்கு:
இந்த நிலையில், கண்டி மாவட்டத்தில் உள்ள நாவல்பிட்டியா என்ற நகரில் இன்று காலை பெரும் கலவரம் வெடித்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் புத்த மத துறவி ஆவார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல கம்போலா, குருதுவத்தா ஆகிய இடங்களிலும் போலீஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் கருணாரத்னே கூறியுள்ளார்.
நாவல்பிட்டியா கலவரத்தில் 6 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications