பெண்களை வைத்து விபச்சாரம்-74 வயது மாஜி டிஎஸ்பி கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக சுங்கத் துறை முன்னாள் டிஎஸ்பி ராஜேந்திரநாத் (இவருக்கு வயது 74) இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சுங்கத்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றியவர் ராஜேந்திரநாத் (74). இவர் கடந்த 2002 ம் ஆண்டு முதல் மதுரையில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் கடந்த இரண்டு வருடமாக விபச்சார தொழில் நடப்பதாக காவல்துறைக்கு புகார் மேல் புகார் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் தயங்கிய வண்ணம் இருந்தனர்.

இந் நிலையில், இவரது வீட்டை கருப்பாயூரணி போலீசார் திடீர் சோதனையிட்ட போது, ராஜந்திர நாத் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, ராஜேந்திர நாத்தையும், அவரது வீட்டின் கீழ் இருந்த காஞ்சனா என்ற பெண்ணையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+