Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதற்கும் துணிந்த திமுக தொண்டர்கள்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இத்தனை ஆண்டுகள் எத்தனையோ சோதனைகளை தாண்டி தாக்கு பிடித்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எதற்கும் துணிந்த தொண்டர்கள் இருப்பதால்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான டி.ஆர்.பாலுவின் சகோதரர் இல்ல திருமண விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசுகையில், இங்கே வரவேற்புரை ஆற்றிய டி.ஆர்.பாலு எல்லோர் பெயரையும் விடாமல் குறிப்பிட்டார். ஆனால் வரவேற்கிறேன் என்று சொல்ல மறந்துவிட்டார்.

இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் கோபு பேசும்போது, அரசியலில் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து திருமண விழாக்களில் பண்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த பண்பாட்டை உறவினர் திருமணத்தில் மட்டும் அல்ல. கருணாநிதி வீட்டு திருமணத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். பண்பாடு என்பது பொதுவானது. அது ஒருவழிப்பாதை அல்ல.

அதை அனைவரும் ஏற்றுக்கொண்டு அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். இதை அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தோழர்களுக்கும் இந்த அறிவுரையை வழங்குவார் என்று நம்புகிறேன்.

டி.ஆர்.பாலு கோபக்காரர் என்று கூறினார்கள். ஆனால் அவரது கோபம் உடனே தணிந்து விடும். ஒருமுறை அவர் தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டார். நான் வேறு ஒரு தொகுதியில் நிற்கும்படி கூறினேன்.

ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அதே தொகுதியில் அவர் நிற்கலாம் என்று கூறி அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கும் கோபப்பட்டார். ஏன் இவ்வளவு தாமதமாக தந்தீர்கள் என்று கோபப்பட்டார்.

அவர் குணத்தை அறிந்துதான் அவருக்கு பாலு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பால் கொதிக்கும் தண்ணீர் விட்டால் தணிந்து விடும். அடிக்கடி அவர் கோபப்பட்டாலும், அவருக்கு எப்படி தண்ணீர் தெளித்து அடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

நான் சொன்னது அனைத்தையும் கேட்கும் அருமை தம்பி பாலு. எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட காலத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கழக தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆட்சியும் கலைக்கப்பட்டது.

இதனால் எனக்கு கார் ஓட்டிய சில டிரைவர்கள் வேலையை விட்டு போய் விட்டார்கள். ஒருமுறை அன்பகத்தில் இருந்து காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது அண்ணா அறிவாலயம் கட்டப்படவில்லை.

அந்த இடத்திற்கு கார் வந்தபோது டிரைவர் திடீரென்று இறங்கினார். நான் வேலையை விட்டு போகிறேன் என்று கூறினார். வீடு வரை வாருங்கள் என்று சொன்ன போதும் அவர் அதை கேட்கவில்லை. பாதியில் என்னை விட்டுவிட்டு போய் விட்டார்.

நான் ஆட்டோ பிடித்து இரவு 12 மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். அதன் பிறகு வெளியூர் சென்றால் எனது காரை கண்ணப்பனும், உள்ளூரில் டி.ஆர்.பாலுவும் ஓட்டினார்கள்.

அப்போது பாலு மிரட்டப்பட்டார். கைது செய்யப்பட்டார். என்றாலும் எதற்கும் துணிந்த, எனக்காக எதையும் செய்யும் தம்பியாக அவர் இருக்கிறார்.

இந்த இயக்கம் இத்தனை ஆண்டுகள் எத்தனையோ சோதனைகளை தாண்டி தாக்கு பிடித்திருக்கிறது என்றால், இந்த இயக்கம் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் எதற்கும் துணிந்த டி.ஆர்.பாலு போன்ற தொண்டர்கள் இதில் இருப்பதால்தான்.

திராவிட இயக்கம் ஜனநாயகத்தை காக்கவும், இந்தியாவை வாழவைக்கவும் தோழமை கட்சிகளுடன் உழைத்து வருகிறது.

இந்த நாட்டில் மத நல்லிணக்கத்தை வேரூன்ற செய்யவும், மதவாதத்தை கிள்ளி எறியவும், ஏழை- எளியவர்கள் வளம் பெறவும் நாம் பெரிய சக்திகளை எதிர்த்து போராட முடிகிறது என்றால், அதற்கு காரணம் பாலு போன்ற தொண்டர்கள் இருப்பதால்தான் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+