ஆஸ்திரேலியாவில் மேலும் நான்கு இந்தியர்கள் மீது வெறித் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த மூன்று டாக்சி டிரைவர்கள் உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த இரு வேறு சம்பவங்களில் தாக்கப்பட்ட செயல் இந்தியர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியு்ளது.

பிரிஸ்பேன் நகரில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பிரிஸ்பேன் நகரில் நடந்த தாக்குதல்களில் நான்கு இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் மூன்று பேர் டாக்சி டிரைவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள், தன்னை டாக்சியிலிருந்து வெளியே இழுத்து அடித்ததாக கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஒரு பீட்சா விற்பனை கடையில் வேலை பார்த்து வரும் 23 வயது இந்திய இளைஞரை ஒரு கும்பல் கிரிக்கெட் பேட்டால் தாக்கிக் காயப்படுத்தி விட்டு அவரிடமிருந்த பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 10 இந்தியர்கள் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+