ஜாதியில்லை என்று கூற கருணாநிதிக்கு தகுதியில்லை-சீமான்

Subscribe to Oneindia Tamil

சாயல்குடி: ஜாதி வாரியாக தனது அரசு கொடுத்த சலுகைகளை அடுக்கும் முதல்வர் கருணாநிதி, ஜாதி இல்லை என்று சொல்ல தகுதியற்றவர் என்று நாம் தமிழர் இயக்க பொறுப்பாளரும், திரைப்பட இயக்குனமான சீமான் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்த நாம் தமிழர் இயக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது சீமான் பேசுகையில்,

கோவையில் செம்மொழி மாநாடு நடத்த உள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ளது, தமிழ் மீது உள்ள பற்றின் காரணமாக அல்ல. ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை, தமிழர்கள் மத்தியில் மறைப்பதற்காகவே அதை நடத்துகின்றார்.

கன்னடர்களுக்கு தேசிய கொடி இருப்பது போல், ராஜராஜ சோழனின் புலிக்கொடியை தமிழர்களின் தேசிய கொடியாக அறிவிக்க வேண்டும்.

பொது மக்கள் தங்களது ஓட்டை போட அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்குவதால், நமது உரிமைகள் பறி போக தொடங்கி உள்ளது.

தற்போதைய தி.மு.க. அரசு, கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் மக்கள் பணத்தில் எமனுக்கு விளம்பரம் செய்து வருகிறது.

தமிழனத்தை அழிக்க துடிக்கும் காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக உள்ளேன்.

ஜாதி வாரியாக செய்த சலுகைகளை அடுக்கும் கருணாநிதி, ஜாதி இல்லை என்று சொல்ல தகுதியற்றவர்.

வரும் மே 18ம் தேதி மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் மாநாடு நடைபெறும் என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+