பென்னாகரத்திலிருந்து அமைச்சர் வேலுவை வெளியேற்ற அதிமுக கூட்டணி கோரிக்கை
சென்னை: பென்னாகரம் தொகுதியில் 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வேண்டும் என்றே நீக்கப்பட்டுள்ளன. அதேபோல அங்கு முகாமிட்டுள்ள அமைச்சர் ஏ.வ. வேலுவை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கோரி அதிமுக கூட்டணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் வேட்டவலம் மணிகண்டன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தை சேர்ந்த இசக்கிமுத்து, இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த இனாயத்துல்லா, தமிழ்மாநில முஸ்லீம் லீக் கட்சியின் ஷேக் தாவூத், இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன் உள்ளிட்டோர் இணை தலைமை தேர்தல் அதிகாரி சந்தானகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்கள்.
அப்போது அவர்கள் அளித்த புகாரில்,
பென்னாகரம் தொகுதியில் எதிர்க்கட்சியை சேர்ந்த 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே இது செயல்படுத்தப்படுகிறது.
அந்த தொகுதியில் இருந்து அமைச்சர் எ.வ.வேலுவை வெளியேற்ற வேண்டும். வாக்காளர் பட்டியல் முழுவதுமாக சரிபார்த்த பின்னரே இடைத்தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.












Click it and Unblock the Notifications