புத்தகக் கடையில் தீ: பல அரிய நூல்கள் நாசம்
சென்னை: சென்னையில் உள்ள பிரபல புத்தக கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல அரிய, விலை உயர்ந்த புத்தகங்கள் எரிந்து நாசமாயின.
சென்னை அண்ணாசாலையில் போலீஸ் நிலையம் அருகே உள்ள இந்த பிரபல புத்தகக்கடையில் இன்று காலை 7 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவல்லிக் கேணி, எழும்பூர், வேப்பேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகளுடன் வீரர்கள் விரைந்து வந்து, ஒருமணிநேரம் போராடி தீ அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் தரைதளம், முதல் தளத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான அரிய மற்றும் விலையுயர்ந்த புத்தகங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.
மின்சார கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கடை திறப்பதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.
அண்ணா சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் தீவிபத்தில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications