ரஷ்ய சிறுமி கற்பழிப்பு-ஒருவன் கைது-இன்னொருவனுக்கு வலை

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் அனில் ரகுவன்ஷி. இவர் கோவா மாநிலம் பெர்னம் என்ற இடத்தில் உள்ள பஸ் நிலையம் அருகே இன்று பிடிபட்டார். இருப்பினும் முக்கியக் குற்றவாளியான அமன் பரத்வாஜ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கோவா டிஐஜி ரவீந்திர யாதவ் கூறுகையில், இருவரும் கோவாவில் உள்ள மருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவார்கள். அனில் மட்டும் தற்போது சிக்கியுள்ளார். அமன் பரத்வாஜைத் தேடி வருகிறோம்.
அமன் மறைந்திருக்கும் இடம் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவரும் பிடிபடுவார்.
அனிலிடம் தீவிர விசாரணை நடந்து வருகிது. இவர்களில் ஒருவர் உ.பியைச் சேர்ந்தவர். இன்னொருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார் என்றார்.
இந்த இரு நபர்களின் புகைப்படங்களையும் கோவா போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
ஜனவரி 26ம் தேதியன்று, பனாஜி அருகே உள்ள ஆரம்போல் கடற்கரைப் பகுதியில் 9 வயதான அந்த ரஷ்யச் சிறுமி தனது தாயாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அமனும், அனிலும் அங்கு வந்துள்ளனர்.
அனில் தாயாருடன் பேச்சுக் கொடுத்து திசை திருப்பியுள்ளார். அந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியை கடற்கரையை சுற்றிக் காட்டுவதாக கூறி ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்ற அமன்,அங்கு வைத்து அந்த சிறுமியைக் கற்பழித்துள்ளார்.
சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு திடுக்கிட்ட அவரது தாயார் எழுந்து ஓடிச் சென்று பார்த்தபோதுதான் நடந்தது தெரிய வந்து அதிர்ந்தார். அதற்குள் அனிலும், அமனும் தப்பி ஓடி விட்டனர்.
இந்த வழக்கை ஆரம்பத்தில் கோவா போலீஸார் சரிவர விசாரிக்கவில்லை. இதையடுத்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடகின், கோவா போலீஸார் இந்த வழக்கை கையாண்டு வரும் விதம் குறித்து மத்திய அரசிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து கோவா முதல்வர் திகம்பர் காமத்துக்கு மத்திய அரசுக்கு கடும் சூடு கொடுத்து விசாரணையை முடுக்கி விட உத்தரவிட்டது.
மேலும் தற்போது இந்த வழக்கை மத்திய அரசு நேரடியாக கண்காணித்து வருகிறது. இதையடுத்து கோவா போலீஸார் துரித கதியில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
லாட்ஜுகளில் வேட்டை
தலைமறைவாக இருக்கும் அமனைக் கண்டுபிடிக்கும் முகமாக, ஆரம்பால் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் லாட்ஜுகளில் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
மேலும் ரஷ்ய சிறுமியின் தாயாரையும் உடன் வைத்துக் கொண்டு அமனைத் தேடி வருகின்றனர் போலீஸார்.












Click it and Unblock the Notifications