ஆஸி.க்குப் போவதை இந்திய மாணவர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

Australia
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்குப் போவதை இந்திய மாணவர்கள் இப்போதைக்குக் கைவிட வேண்டும், தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் நகரங்களில் கடந்த சில நாட்களில் 10 இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இந்த புதிய அறிவுறுத்தலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இகு குறித்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரனீத் கெளர் கூறுகையில், இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து முழு விசாரணை நடத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆஸ்திரேலியாவை கேட்டுக் கொண்டுள்ளோம்.

எங்களால் முடிந்ததையெல்லாம் செய்கிறாம். அந்த நாட்டு்க்குப் போக வேண்டாம் என அறிவுறுத்தினோம். இப்போது அந்த நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறாம் என்றார்.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரை லண்டனில் நடந்த நிகழ்ச்சியின்போது சந்தித்துப் பேசினார்.

அப்போது இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த ஆண்டும் சரமாரியாக இந்தியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆஸ்திரேலிய அரசும் கூட பீதியடைந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க தனி கமிட்டி ஒன்றை அது நியமித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்கள் தொடர்பான விவரங்களையும் அது இந்தியாவிடம் அளித்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதல்கள் இனரீதியானவை என்பதை அந்த தகவல்கள் தெரிவிக்கவில்லை. பொத்தாம் பொதுவான தகவலாகவே உள்ளதாக கிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியர்கள் மட்டும் ஏன் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள் என்று தான் கேட்டதற்கு ஆஸ்திரேலிய அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் விளக்கம் அளிக்கவில்லை என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களில் 10 இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா தனது நிலையை மேலும் கடுமையாக்க முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாகவே ஆஸ்திரேலியாவுக்குப் போக வேண்டாம் என இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று இந்தியா அறிவுறுத்தியது. இந் நிலையில் இரண்டாவது முறையாக மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்ல வேண்டாம் என்ற அட்வைஸை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+