தமிழகத்திற்குள் பெருமளவில் ஆந்திரா, ஒரிசாவிலிருந்து கஞ்சா கடத்தல்
தூத்துக்குடி: போலீசாரின் கெடுபிடியால் தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது குறைந்துள்ள நிலையில் ஒரிசா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டு விற்கப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஈடுபடும் கும்பலை கண்டறியும் பணியில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தேனி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கஞ்சா பயிரிடப்பட்டது.
கஞ்சா விற்பனையை தடுக்க போதை பொருள் தடுப்பி பிரிவினர் மற்றும் உள்ளூர் போலீசார் மேற்கொண்டு வரும் கடும் நடவடிக்கையால் உள்ளூரில் கஞ்சா பயிரிடுவது ஓரளவு குறைந்துள்ளது.
அதே சமயத்தில் தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பல நகரங்களில் சிறிய அளவிலான கஞ்சா விற்பனை தொடர்ந்து நடப்பதும், அதன் பின்னணியில் ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும் போலீசார் அறிந்துள்ளனர்.
தமிழகத்தில் மிக அதிக அளவில் தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு, சேலம் பகுதிகளில் தான் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநில போதை தடுப்பு பிரிவு போலீசார் கூறுகின்றனர்.
இப்பகுதியில் விற்பனை செய்யப்படும் கஞ்சா ஓரிசா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தான் அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன.
சாலை மார்க்கமாக கொண்டு வந்தால் சோதனைகளில் சிக்கி விடுவோம் என்பதால், ரயில் மூலம் கஞ்சாவைக் கொண்டு வந்து விற்று வருகிறார்களாம்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications