இம்ரானுக்கு முஷாரப் ரூ. 4 கோடி தந்தார்-பெனாசிர் கட்சி

Subscribe to Oneindia Tamil

லாகூர்: தனக்கு ஆதரவாக செயல்படுவதற்காக முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு, அப்போதைய சர்வாதிகாரி முஷாரப் ரூ. 4 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராஜா ரியாஸ் கூறுகையில்,

கடந்த 2002-ம் ஆண்டு ராணுவ தளபதியாக இருந்த பர்வேஷ் முஷரப் ஜனாதிபதி ஆட்சி அமைக்க மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தினார். இதற்கு ஆதரவாக செயல்பட அவரிடம் இருந்து இம்ரான்கான் ரூ.4 கோடி லஞ்சம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முஷரப் ஆட்சியின் போது கிரிக்கெட் வாரியத்தில் இவர் தனது உறவினர்களுக்கு முறைகேடாக வேலைவாய்ப்பு அளித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இம்ரான்கான் மறுத்துள்ளார். ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ராஜா நிரூபிக்கட்டும். நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று இம்ரான் கான் சவால் விட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து வழக்கு தொடரப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+