விலைவாசி உயர்வு குறித்து சோனியாவுக்கு இத்தாலி மொழியில் கடிதம் எழுதுவேன் -மோடி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், அதுதொடர்பாகவும் மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதி விட்டேன். ஆனால் ஒரு பதிலும் வரவில்லை.
விலைவாசியைக் குறைக்க என்ன நடவடிக்கை தேவையோ அதை எடுங்கள் என்று கூறி அவர்களுக்குப் புரியும் பாஷையில் கடிதங்கள் எழுதினேன். ஆனால் பலன் இல்லை.
அவர்களுக்கு ஏழை மக்கள் குறித்து இரக்கமே இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் விலைவாசியைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
எனவே அவர்களுக்குப் புரிந்த, தெரிந்த இத்தாலிய மொழியில் கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்.
விலைவாசிக் குறைப்பு தொடர்பாக ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். ஆனால் பிறகு அதை தள்ளிப் போட்டு விட்டனர். கேட்டால் வேறு வேலை உள்ளது என்கிறார்கள். இதை விட முக்கியமான வேலை என்ன உள்ளது என்று எனக்குப் புரியவில்லை என்றார் மோடி.












Click it and Unblock the Notifications