சுவாமி எதிர்ப்பு-பதிலளிக்க நேரில் வர அனுமதிக்க கோரி உயர்நீதிமன்றத்துக்கு நளினி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது என்று கூறி மனு தாக்கல் செய்துள்ள ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் மனுவுக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்க அனுமதி தரக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட சிறை ஆலோசனைக் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் சுப்ரமணியம் சுவாமி.
இந்த நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சுவாமி தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க எனக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications